Tuesday 13 August 2013

திராவிட இயக்கத்தின் தாக்கமும் அதன் மீதான  அதிதீவிர வெறுப்பிற்கான காரணங்களும் 


   
திராவிட எதிர்ப்பு தங்கங்களே
http://articles.timesofindia.indiatimes.com/2012-05-06/india/31597294_1_upper-castes-scs-durables
Three states however buck this trend; across caste groupings in Punjab, Kerala and Tamil Nadu, the rate of ownership of basic consumer durables is high. In fact, the asset ownership rate for scheduled castes in these three states is better than that of OBCs and upper castes in all other states.
Tamil Nadu and Punjab are the only states where the proportion of SCs who do not own basic assets is around 10% or lower, lowest of all in Tamil Nadu. Asset ownership among SCs in these three states is higher than that among “others” in all other states.
the key determinant of each of these states’ human development situation is not its caste composition, but its politics and governance, Mehrotra says.
அதாகப்பட்டது தமிழகத்தில்/கேரளத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்டவர்களின் நிலை ஹிந்டுத்வர்கள் வலுவான நிலையில் உள்ள மாநிலங்களில் உள்ள முற்பட்ட பிரிவினரை விட மேலாம்.அதற்க்கு இங்கு நடந்த நல்லாட்சிகள் தான் காரணமாம்

ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதை போல தான் திராவிட இயக்கமும்.அந்த இயக்கத்தை பெருமளவில் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் சுவீகரித்து கொண்டதால் அவர்கள் நன்றாகவே பலன் பெற்றார்கள்.மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் தான் அதன் பலன்கள் புரியும்.
ஹிந்துத்வம் மற்றும் காங்கிரஸ் கோலோச்சிய/கோலோச்சும் ராஜஸ்தான்,உத்தர் பிரதேசம்,மத்திய பிரதேசம் ,பீகார் ,கர்நாடகா போன்ற மாநிலங்களில் சாதிகளுக்கு இடையே ஆன நிலையோடு தமிழகத்தை ஒப்பிட்டால் நம் நிலை புரியும்.
திருப்பி அடிக்கலாம்/சாதி கடந்து திருமணம் செய்யலாம்,பிறப்பால் எவனும் உயர்ந்தவன் கிடையாது என்ற சிந்தனையே அங்கு பின்தங்கிய சாதிகளுக்கு இன்னும் வரவில்லை.
மதரீதியாக சாதிகள் இல்லை என்று சொல்லும் சீக்கிய மதத்தை ஏற்ற பஞ்சாபில் கூட சாதிபிரிவினைகள் வெகு அதிகம்.முப்பது சதவீதத்திற்கு மேல் இருந்தாலும்/பொருளாதார ரீதியாக முன்னேறி இருந்தாலும் தலித் சீக்கியர்களுக்கும் உயர்சாதி சீக்கியர்களுக்கும் பிளவுகள் மிக அதிகம்.இப்போது கூட கீழ் சாதி சீக்கியரை மணந்த குற்றத்திற்காக சொந்த மகளை கொலை செய்த/வலுகட்டாயமாக கரு கலைப்பு செய்து இறப்புக்கு காரணமான குற்றத்திற்காக மந்திரி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
சாதி வேண்டாம் என்பவர்களை கிண்டலாக /வெறுப்பாக பார்க்கும்,சாதிரீதியான பெருமைகள் /இழிவுகள் சரி தான் என்ற எண்ணமே அங்கு மிகவும் பெரும்பாலோருக்கு இன்றும் உண்டு(பாரதியின் மறைவிற்கு கூட போகாத,அவரை சபித்த நம் தமிழகத்தின் 90 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிலை தான் ).இங்கே போலித்தனமாக இருந்தாலும் சாதி வேண்டாம் ,ஒழியனும் என்று பேசுபவர்கள் பலர் உண்டு.தலைவர்களும் அதில் அடக்கம்.அதில் ஓரிரு சதவீதம் சொல்வதற்கு ஏற்ப உண்மையானவர்களாக இருந்தால் கூட அதுவே மற்ற மாநிலங்களை விட பல மடங்கு அதிகம் தான்.
24 ஆண்டுகளுக்கு முன்னே கலைஞர் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முப்பது சதவீதம் இட ஒதுக்கீடு செய்தார்.ஜெயலலிதா அனைத்து பெண்கள் காவல் நிலையம்,பெண் கமாண்டோ என்று பெண்கள் அனைத்து துறைகளிலும் மிளிர நடவடிக்கைகள் எடுத்தார்.
தமிழகத்தை சேர்ந்த பெண்கள் தான் அதிகமாக வேலைக்கு போவது,பெரிய பதவிகளில் சிறந்து விளங்குவது ,சாதி மறுப்பு திருமணங்களில் ஈடுபடுவது போன்றவற்றில் முன்னோடியாக உள்ளனர்.
மத்திய அரசு பணிகளில்,விளையாட்டு,கலைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் மற்றும் ஒதுக்கீட்டு வகுப்பினர் பெரும்பாலும் தென் மாநிலங்களை சார்ந்தவர்களே
தமிழகத்தில் சாதிகளுக்கு இடையே ஆன இடைவெளி குறுகி கொண்டே தான் வருகிறது.அதற்கு திராவிட இயக்கம் முக்கிய காரணம்

மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் தான் திராவிட இயக்கத்தின் பலன்கள் புரியும்.திராவிட இயக்கம் இல்லாத /வலுபெறாத மாநிலங்களில் சாதி ஒழிந்து விட்டதா,சாதி அடிப்படையில் கொலைகள்,வன்கொடுமைகள் நடை பெறுவதில்லையா.
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை முதலில் வழங்கியது திராவிட ஆட்சி தான்.சாதி மறுப்பு திருமணதிற்கு அரசு ரீதியான ஆதரவு,பரிசு,இட ஒதுக்கீடு வழங்கியது திராவிட கட்சிகள் தான்.பெண்களுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதும் கலைஞர் தான் .


முக்கால்வாசி மாநிலங்களில் வேறு மதத்தவர் நடத்தும் கடைகள்,உணவகங்களுக்கு யாரும் போக மாட்டார்கள்.வெகு எளிதாக மத,சாதி சண்டைகள் பற்றிகொள்ளும்.
பீகாரில் புமிஹார் பிராமணர்கள் ரன்வீர் சேனா என்று அமைப்பு வைத்து வார வாரம் படுகொலைகளை  நிகழ்த்துவார்கள்
அதே போல் குழந்தை திருமணங்கள்,பெண்ணை அடிமையாக நடத்துவது எனபது தான் அங்கு உள்ள நிலை.
சாதியை சொல்லி உரிமையை கோருவதும்,உரிமையை மறுப்பதும் தலைநகரங்களிலேயே சாதரணமாக நடக்கும்.வேறு சாதியை சேர்ந்தவர்களை திருமணம் செய்யலாம் என்ற நினைப்பு வரவே அங்கு இன்னும் அறை நூற்றாண்டு ஆகும்
திராவிட இயக்கத்தில் பல குறைகள் இருந்தாலும் மற்ற காங்கிரஸ்/இந்துத்வா கட்சிகள் கோலோச்சும் மாநிலங்களின் நிலையோடு தமிழகத்தை ஒப்பிட்டால் நம் நிலை பல மடங்கு மேல்





உட்டர்ப்ரதேசதில் மக்கள் வோட்டு பல துண்டுகளாக சிதறி உள்ளது.இப்போது முலாயமும் மாயாவதியும் மாறி மாறி வருவது பா ம க வும் விடுதலை சிறுத்தையும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது போல
இப்போது வெறியோடு ராஜு பையாகளும் யாதவ்களும் பழி தீர்த்து கொள்வார்கள்.இருவரின் ஆட்சியிலும் அதிக அட்டகாசம் உயர்சாதியினரான பிராமணர்,ராஜபுதிரகள் செய்வது தான்.
சோனியா சுஷ்மா மம்தா ஜெயா ஷீலா பதவியில் இருப்பதால் டௌரி ஒழிந்து விட்டதா,இல்லை பெண் சிசுகொலை குறைந்து விட்டதா
அதிக எண்ணிகையில் அனைத்து பதவிகளிலும் தலித்கள் ,பெண்கள் இருப்பது தமிழகத்தில் தான்.மத்திய அரசு பணிகளில் ,அரசு அதிகாரிகளாக குஜராத்திலோ இல்லை உட்டர்ப்ரதேசதிலோ கூட மத்திய அரசு பணிகளின் கீழ் ஒதுக்கீட்டு இடங்களை பிடிப்பது தமிழர்கள் தான்
 

சில ஆயிரம் பேர் உள்ள தேவதாசி முறைக்கு பெண்களை விட வைக்கப்பட்ட கருணாநிதி /அண்ணாதுரை திராவிட இயக்கத்தால் முதல்வர் ஆனது எந்த விதத்திலும் குறைந்த சாதனை அல்ல.
ஆந்திராவில் காங்கிரஸ் தலித் ஒருவரை முதல்வர் ஆக்கியதாலோ /இல்லை பா ஜ கா மத்தியில் பங்காரு தமிழகத்தில் கிருபாநிதி (அவரும் தி மு க வில் ஐக்கியமாகி விட்டார்)என்ன பெரிய மாற்றம் வந்தது.அவர்களுக்கு ஏதாவது சக்தி இருந்ததா.
ஒதுக்கீட்டு பிரிவினர் ஒட்டுமொத்தமாக முன்னேறி வருவதில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது என்பதை உங்களால் மறுக்க முடியுமா
உத்தர் பிரதேசத்தில் ,குஜராத்தில் தமிழகத்தை விட அதிக அளவில் தலித்கள் மருத்துவராக,பொறியாளராக,வங்கி அதிகாரிகளாக,நீதிபதிகளாக,ஆட்சி பணி அதிகாரிகளாக வருகிறார்கள் என்று கூற முடியுமா.இதையும் கொஞ்சம் பாருங்கள்
http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3384834.ece
On the other hand, when it came to the Backward Classes – other than Muslims for whom 49 posts were reserved, a total of 3,096 candidates (46.2 per cent), including 2,035 male and 1,061 female, participated in the examinations and 220 of them, equal to 47.83 per cent within the category, cleared all the four papers.
The next big success was achieved by Scheduled Caste candidates. About 1,341 (20.01 per cent) of them, including 977 male and 364 female, wrote the examinations and 111 got selected for the viva voce taking the percentage of successful candidates in their category to 24.13 per cent.



சாதி ,மத சண்டைகள் எந்த மாநிலங்களில் அதிகம் என்பதை பார்த்து விட்டு திராவிட இயக்கத்தை பழித்தால் ஞாயம்


எண்ணிக்கை அதிகமாக யார் இருந்தாலும்/அதிகாரத்திலும் பங்கோடு இருக்கும் போது அவர்கள் ஆதிக்கம் செய்வது தான் எங்கும் நடக்கிறது.அதை தடுப்பது தான் இட ஒதுக்கீடு
உத்தர் ப்ரதேச மாநிலத்தில் பிராமணர்கள் நம்ம ஊரில் உள்ள முக்குலத்தோர்,வன்னியர்,நாடார் போல குறிபிடத்தக்க சதவீதத்தில் உள்ளனர்.அங்க சும்மா அடிச்சு விளையாடுவாங்க
முக்கால்வாசி தாதா,கொலை கொள்ளை எல்லாவற்றிலும் திவாரி,ஷர்மா,திரிபாதி என்று தான் பெயர்கள் இருக்கும்
செல்வி மாயாவதியின் ஆட்சியில் ஒரு குப்தா என்ற பொறியியல் இன்ஜிநீரை அடித்து கொன்ற எம் எல் ஏ ஒரு திவாரி
http://articles.economictimes.indiatimes.com/2008-12-24/news/28465674_1_pwd-engineer-m-k-gupta-bsp-mla-shekhar-tiwari
இப்ப அகிலாஷ் யாதவ் ஆட்சிக்கு வந்தவுடன் கூண்டாஇசம் ,ஆட்டோ டிரைவர் அடித்து கொலை என்று செய்தி .பார்த்தல் ஒரு திவாரி யாதவ் என்பரை அடித்து கொலை செய்கிறார்
இடைநிலை மற்றும் மற்ற உயர்சாதியினரையே இந்த அடி அடிகிறார்கள் என்றால் அவர்களுக்கு கீழ் உள்ளவர்களின் நிலையை எண்ணி பாருங்கள்.
பார்சிகள் ஒன்றும் செய்வதில்லை மற்ற சிறுபான்மையினரான இஸ்லாமியர்களை போல என்றால் காரணம் எண்ணிக்கை. அவர்களின் பாதி எண்ணிகையில் பார்சிகள் இருந்தால் அவர்களும் புகுந்து விளையாடுவார்கள்
http://zeenews.india.com/news/uttar-pradesh/amarmani-tripathi-out-of-jail-for-2-months_729950.html
http://news.worldsnap.com/states/bihar/behind-bars-but-jd-u-legislator-munna-shukla-still-enjoys-minister-status-88475.html
வேறு மாநிலத்தில் மும்பையில் வசித்தாலும் தன் தங்கை கேரளாவை சேர்ந்த கீழ்சாதியை சார்ந்தவனை மணந்து கொண்டதால் அவர்கள் குடும்பத்தையே அழித்த திவாரி சகோதரர்களின் வழக்கில் நீதிபதியும் அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது என்று தீர்ப்பு தந்ததும் இங்கு உண்டு
http://www.indlaw.com/guest/DisplayNews.aspx?8B2609C9-2E84-46DB-92F8-F2FDB42A0616



திராவிட இயக்கத்தால் அதிகம் பலனடைந்தது ஹிந்து மதமும்,பிராமணர்களும் தான்
இன்று இஸ்லாமை பார்த்து கேள்வி கேட்கும் நிலைக்கு,கிண்டல் செய்யும்,பழிக்கும் நிலைக்கு ஹிந்து மதத்தை பின்பற்றுபவர்கள் பேசும் நிலையை உருவாக்கியது அம்பேத்கரும் பெரியாரும் தான்
அவர்கள் அடித்த அடியில் தான் தன பழமைவாதங்களை,பிற்போக்குத்தனங்களை,பெண்களை விலங்குகளை,அடிமைகளை விட கேவலமாக நடத்துவதை ஹிந்து மதம் விட்டு விட்டது
திராவிட இயக்கத்திற்கு முன்னால் லட்சக்கணக்கில் நாடார்கள்,வன்னியர்கள்,கள்ளர்கள்,மீனவர்கள்,உடையார்கள் என்று தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்ட சாதி மக்களும் கிருத்துவத்திற்கு மாறினர்
அவர்கள் அனைவருக்கும் சுயமரியாதையை உருவாக்கியதால்,எதிர்க்கும் சக்தியை தந்ததால் தான் மத மாற்றங்கள் நின்றன
இங்கு வந்த மிச்சிஒனரிகள் அளவிற்கு வட மாநிலங்களில் இருந்திருந்தால் அவை முற்றிலுமாக மாறியிருக்கும்.பக்கத்தில் இருக்கும் கேரளாவில் நாராயண குரு அவர்களின் பிராமணர்களை ஒதுக்கிய ஹிந்து மத வழிப்பாடுகள் வந்ததால் கூட பாதி தான் மத மாற்றம் இல்லாமல் தப்பித்து
பெரியாரால் தான் இங்கு மத மாற்றங்கள் தடுக்கப்பட்டன.கடவுள் இல்லை, இல்லவே இல்லை
கடவுளை நம்புபவன் முட்டாள் எனபது தான் மத மாற்றங்களை தடுத்தது
இங்கிருக்கும் பிராமணர்களையும் மற்ற மாநிலங்களில் (பக்கத்து மாநிலங்கள் உட்பட)உள்ளவர்களையும் ஒப்பிட்டால் அவர்கள் வாழ்க்கையில் பெரியாரால் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் புரியும்
கடல் தாண்டினால் ஒதுக்குதல்,நன்கு படித்தவர்கள் கூட பெண்களை பதினெட்டு வயதில்,அதற்கு முன் திருமணம் செய்தல்,பெண்களை,விதவைகளை மிகவும் இழிவாக நடத்துதல் ,சாதி கோட்பாடுகளை தீவிரமாக கடைபிடித்தல் என்று 1930 லேயே பலர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவிலேயே சிறந்து விளங்குபவர்கள் தமிழக பிராமணர்கள் தான்.பிராமண பெண்களில் நல்ல பதவியில்,கலைகளில்,எந்த துறை எடுத்து கொண்டாலும் சிறந்து விளங்குபவர்களில் பெரும்பான்மையானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான்
பெரியாரின் சாதி மறுப்பு திருமணங்களை பெருமளவில் ஆதரிப்பவர்கள் அவர்கள் தான்

பல மாநிலங்களில் வேலை செய்தவன்.அரசு ,பொதுத்துறை இரண்டிலும் வேலை செய்தவன் செய்து கொண்டிருப்பவன் என்ற முறையில் நான் பார்த்தவரை தமிழகத்தை சார்ந்த அரசு வேலையில்,தனியாரில் வேலை செய்பவர்களின் சாதி மறுப்பு திருமணங்கள் அதிகம்
வட மாநிலங்களில் பெண்களின் எண்ணிக்கை குறைந்ததால் வடகிழக்கில் மற்றும் மிகவும் பின்தங்கிய பகுதியில் இருந்து பெண்களை மனைவியாக எடுத்து கொண்டு வரும் வழக்கம் உண்டு.
பல நூற்றாண்டுகளாக அங்கு பெண்களை சில சாதிகளில் இருந்து எடுக்கலாம் ஆனால் கொடுக்க மாட்டோம் என்ற வழக்கமும் உண்டு
பிராமணர்களை மணந்த தலித்கள் என்று எடுத்து கொண்டால் தமிழகம் மற்ற மாநிலங்களை விட நூறு மடங்கு அதிகம்.
எந்த மத்திய அரசு,பொது துறை நிறுவனங்களில் வேண்டுமானாலும் நுழைந்து பாருங்கள்.அங்கு பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணி புரிவார்கள்.
எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் சாதிமறுப்பு திருமணம் புரிந்திருக்கிறார்கள் என்று புரியும்
சாதியை பொறுத்தவரை கிராமங்களின் நிலையில் தமிழகம் மிகவும் பின்தங்கி.பிற்போக்கான நிலையில் தான் உள்ளது என்பதை மறுக்கவில்லை

    எந்த சமூகத்தின் பெண்கள் அதிக அளவில் சாதி/மதம் கடந்து திருமணம் செய்து கொள்கிறார்களோ அந்த சமூகங்களின் ஆண்கள் தான் அளவுகடந்த வெறுப்பை திராவிட இயக்கங்களின் மேல் காட்டுபவர்கள்.

  திராவிட இயக்கம் இல்லாததால் இந்த மாநிலம்/பகுதி தமிழகத்தை விட மத நல்லிணக்கத்தில்,பெண் கல்வியில்,அணைத்து சாதியில் இருந்தும் மக்கள் உயர் பதவிகளுக்கு வருவதில் பல மடங்கு மேலே உள்ளது என்று எடுத்துக்காட்டுகளை எடுத்து வீசி விட்டு வெறுப்பை கொட்டினால் ஞாயம்  

4 comments:

  1. அனைத்து பிற்பட்ட சாதிகளிலும் பரவலான முன்னேற்றம் திராவிட இயக்கத்தின் ஆட்சியில் தான்.இங்கு தான் இரு கட்சிகளிலும் பிற்பட்ட வகுப்பு மக்கள் அதிக அளவு இடங்களை பெறுகிறார்கள் கவுன்ட்டர் பாலன்சிங் ஆக.
    கேரளாவில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியில் மூன்று ஈழவ எம் எல் ஏ க்கள்.கம்யூனிஸ்ட் கட்சியில் 20திர்க்கும் மேல் ஈழவ எம் எல் ஏ க்கள்.காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற நாயர்கள் 17.கம்யூனிஸ்ட் கட்சியில் ஆறோஏழோ.
    தேவ கெளட கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தான் வொக்கலிகர் அதிகம் இருக்கும் தௌகுதிகளில் போட்டி.வோக்கலிகா ஒருவரை முதல்வர் ஆக்கினாலும் அவர்கள் கௌடா பின்னால் வலுவாக இருக்கிறார்கள் என்பதால் தான் பா ஜ க அவரை தூக்கி விட்டு லின்காயத்தை ஆக்கியது.இது தான் சாதி அரசியல்
    வைச்யரான ரோசையாவால் ரெட்டி வோட்டுக்கள் ஜகன் பின் செல்வதை தடுக்க முடியாது.(அங்கு ரெட்டிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்ற பிற்பட்டதாழ்த்தப்பட்ட சாதி வோட்டுக்களும் அதிகம்.)என்பதால் கிரண் குமார் ரெட்டி முதல்வர் ஆக்கபட்டார். இது தான் சாதிஅரசியல்.
    இங்கு ஆறு மாதம் முதல்வராக இருந்த முக்குலத்தோர் சாதியை சார்ந்த பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு மறுபடியும் ஜெயா முதல்வர் ஆன போது ஒரு சிறு சலசலப்பு கூட கிடையாது.இதுவா சாதி அரசியல்
    காமராஜ் அவர்களின் காலத்தில் கூட வன்னியர் பகுதிகளில் அவர் கட்சி ஜெயிக்கவில்லை.சாதி கட்சிகள் தான் ஜெய்த்தன.கொங்கு வெள்ளாளரும் தங்கள் சாதியை சார்ந்த சி சுப்ரமணியம் முதல்வர் ஆவதை தடுத்தவர் என்று அவருக்கு எதிர் அணி தான்.காமராஜரும் தன சாதி மக்கள் அதிகம் இருக்கும் தௌகுதியில் தான் நின்றார்.
    எம் ஜி ஆர் கருணா ஜெயா எல்லாம் அப்படியா. விஜயகாந்த் கூட வன்னியர் அதிக எண்ணிக்கையில் இருக்கும் விருத்தாசலம் ரிஷிவந்தியத்தில் ஜெய்கிறார்
    இப்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் அதிக வோக்கலிக எம் எல் ஏக்கள் கௌடா கட்சியில் தான் இருப்பார்கள்.பா ஜ காவில் லிங்காயத் எம் எல் ஏக்கள் தான் இப்போதைய சட்டசபையிலும் மிக அதிகம்.
    கேரளாவின் கதையை மேலே பார்த்தோம்.இங்கு அப்படியா.அதிமுக வெற்றி பெறும்போது அதில் அனைத்து சாதி மக்களும் குறிபிடத்தக்க அளவில் வெற்றி பெறுகிறார்கள்.தி மு க வெற்றி பெற்றாலும் அதே நிலை தான்.தலைமை மிக சிறுபான்மை சாதிகள்.

    ReplyDelete
  2. சாதியை பார்த்து ஆட்களை நிறுத்துகிறார்கள் என்ற பிட் ஆதாரம் இல்லாமல் ரொம்ப நாளாக திராவிட எதிர்ப்பாளர்களால் ஒட்டப்படுகிறது.
    விஜயகாந்த் சினிமாவில் புள்ளி விவரம் தருவது போல ஒவ்வொரு தொகுதியிலும் எந்த எந்த சாதிக்காரர் கடந்த பத்து தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை பார்த்தால் இந்த வாதத்தில் உள்ள பொய் புரியும்
    சாதி தலைவர்களின்,சாதி கட்சிகளின் குற்றச்சாட்டே அவர்கள் சாதியினருக்கு வர வேண்டிய இடங்கள் திராவிட கட்சியினரால் சிறுபான்மை சாதிகளுக்கு சென்று விட்டன எனபது தான்
    மற்ற எல்லா மாநிலனகளையும் விட குறைவான எண்ணிக்கையில் இருக்கும் சாதியினர் வேறு சாதியினர் அதிகம் இருக்கும் தொகுதிகளில் செய்த்தது அதிக அளவில் தமிழகத்தில் தான்.
    தேசிய கட்சிகளில் ,மாநில முதலவர்களில் மற்ற மாநிலங்களில் நூத்துக்கு 99 பெரும்பான்மை சாதிகள் தான்.இங்கு மட்டும் தான் எண்ணிக்கை குறைவான சாதிகளின் தலைமை.


    எடியுரப்பா,கிருஷ்ணா முதல்வர்களாக இருந்தாலும் அவர்களும் அவர்கள் வாரிசுகளும் லிங்காயத் அதிகம் இருக்கும் தொகுதிகளில் தான் நிற்ப்பார்கள்.பிரதமராக இருந்தாலும் வொக்கலிகர் அதிகம் இருக்கும் தொகுதியில் தான் தேவ கெளடாவும் வாரிசுகளும் எல்லா தேர்தலிலும் நிற்கிறார்கள்.கம்முநிச்டாக இருந்தாலும் அச்சுதானந்தன் நிற்பது ஈழவர்கள் அதிகம் இருக்கும் தொகுதி தான்.ஆந்திரம்,உதர்ப்ரதேசம் ,உட்டர்க்ஹாந்த்(முதல்வராக இருந்தாலும் ராஜபுத்திர உட்கட்சி ஆட்களே தங்கள் கட்சியின் க்ஹண்டூரியை தோற்கடித்தார்கள்)எல்லாவற்றிலும் இதே கதை தான்.வங்காளத்தில் மாத்திரம் ஒதுக்கீட்டு தொகுதிகள் மீதியில் முக்கால்வாசி பிராமணர்கள்.மக்கள் தொகையில் பத்து சதவீதத்திற்கு கீழ் இருந்தாலும் 35 சதவீத இடங்கள் அவர்களுக்கு.இதை விரும்புகிறவர்கள் தான் சாதி பார்த்து ஒட்டு போடுகிறார்கள் என்ற போலியான குற்றசாட்டை வீசுபவர்கள்
    தமிழகத்தின் நிலையை பார்ப்போமா .இங்கு கட்சியை இரும்பு பிடிக்குள் வைத்திருக்கும் தலைவர் ஒருவரின் சாதியும் எந்த தொகுதியிலும் அதிக எண்ணிக்கையில் இல்லாத சாதி தான்
    கருணாநிதி,ஸ்டாலின்,மாறன்,எம் ஜி ஆர்,ஜெயா நின்ற தொகுதிகளின் பட்டியலை பார்த்தால் என் கூற்றின் உண்மை விளங்கும்

    ReplyDelete
  3. திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் வீட்டுப் பெண்கள் சாதி மதம் கடந்து திருமணங்கள் செய்வதில்லை என்பதால் அப்படி வெறுப்பை காட்டுவதில் நியாயம் இருக்கிறது.

    ReplyDelete
  4. // பிராமணர்களை மணந்த தலித்கள் என்று எடுத்து கொண்டால் தமிழகம் மற்ற மாநிலங்களை விட நூறு மடங்கு அதிகம்./// பின்ன திட்டம் போட்டு லவ் ஜிகாத் பண்ணி தூக்கினா ஏன் நடக்காது. அதுக்குத்தானே இப்போ மத்த ஜாதிக்காரங்கள்ல்லாம் சேந்து தலித்துங்களுக்கு ஆப்பு வெச்சாங்க...!

    ReplyDelete